உங்களுக்கு கூடுதல் வருமானம் வேண்டுமா? ஆனால் யாரையும் எதிலும் இணைத்துவிட இயலாது என்பவரா நீங்கள்? அப்படியானால் பிறரை இணைத்துவிடும் பணியை நான் கையிலெடுத்துக் கொண்டால் உங்களுக்கு சம்மதம் தானா? (நீங்களும் செய்ய முடிந்தால் தடையேதுமில்லை. நான் என் பணியை தொடர்ந்து செய்வேன்.)
நீங்கள் ஒவ்வொரு மாதமும் பற்பசை, பிரஷ், டீ, காபி, சோப், ஷாம்பூ, கண்டிஷனர், கூந்தல் எண்ணெய், வாசனை ஸ்ப்ரே, டால்கம் பவுடர், அழகுப் பொருட்கள், சமையல் எண்ணெய், ஊட்டச்சத்து பானம், துணி துவைக்கும் சோப், பாத்திரம் துலக்கும் கலவை மற்றும் இதர பொருட்கள் வாங்குபவரா?
ஆம் எனில், உங்களை கூடுதல் வருமானம் பெறச்செய்ய என்னால் முடியும், நீங்கள் உங்கள் பிராண்டை மாற்றினால். (நீங்கள் மாதமாதம் ரூ.800க்கு எங்கள் பிராண்ட் பொருட்களை வாங்கினால் போதுமானது. அதற்கும் உங்களுக்கு ஒரு பொருள் ஒவ்வொரு மாதமும் இலவசமாகக் கிடைக்கும்.)
(கீழே உள்ளவர்களின் வருமானத்தைப் பாருங்கள். அதை உங்களால் நம்பமுடிகிறதா என்று பார்ப்போம்.)
1. நல்லது. அவர்கள் செய்த "வேலை"தான் என்ன?
உண்மையை கூறினால் தனியாக வேலை என்று எதுவும் இல்லை.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் மாதாமாதம் ரூ.800-க்கு வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவது ஒன்றுதான் வேலை. (உங்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அதை வேறெங்கோ செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள்.) மேலே உள்ள அனைவரும் அதை எங்கள் நிறுவனத்தில் செய்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக விரிவடைந்து வருமானம் வளரத் தொடங்கியது.
எங்கள் நிறுவனத்தின் பெயர் வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் ஆகும். 2004-ல் ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம். ஆனால் எங்கள் நிறுவனம் ஆசிய தர அடையாளக் கருத்தரங்கு வழங்கும் "அதிகம் விரும்பப்படும் பொருட்கள்" விருதில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தொலைக்காட்சியிலோ வேறு எந்த ஊடகங்களிலோ எங்கள் விளம்பரங்கள் வருவதில்லை. ஆனால் எங்கள் தயாரிப்புகள் பல பிரபல தயாரிப்புகளை விட பன்மடங்கு தரமானவை. (உதாரணத்திற்கு, விளம்பரங்களில் வரும் ரூ.30 விலையுள்ள பிரபல சோப் 65% TFM கொண்ட 3ம் தரம் ஆகும். எங்கள் நிறுவனத்திலோ, விலை அதேதான், ஆனால் எங்கள் சோப் 78% TFM கொண்ட முதல் தரமாகும். அதே போல் விளம்பரங்களில் வரும் நான்காம் தர டீ 250 கிராம் விலை சுமார் ரூ.120. எங்கள் நிறுவனத்திலோ இரண்டாம் தர 100% CTC டீ 250 கிராம் விலை வெறும் ரூ.95 மட்டுமே.)
2. நல்ல வருமானம் வர எவ்வளவு நாளாகும்?
மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் ரூ.3,00,000 சம்பாதிக்கும் நபருக்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. ரூ.40,00,000 சம்பாதிக்கும் நபருக்கு 8+ ஆண்டுகள் ஆகியுள்ளது.
ஆனால், அவர்கள் அனைவரும் முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே ரூ.5000 முதல் ரூ.10000 சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது உங்களுக்கு கணிசமான வருமானமாகத் தோன்றுகிறதா? ஆம் எனில், இந்த வாய்ப்பை உடனடியாகக் கையில் எடுங்கள் என்றே நான் பரிந்துரைப்பேன்.
3. பொருட்களின் தரம் மற்றும் விலை எப்படி
எங்கள் வெஸ்டிஜ் நிறுவனமானது GMP எனப்படும் "Good Manufacturing Practice" (உயர்ந்த தயாரிப்பு முறை) சான்று பெற்றது. (அதுவும் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டது.) இருப்பினும், எங்கள் தயாரிப்புகள் சாமானிய மக்களும் வாங்கும் விலையில் உள்ளன. (வேறு பக்கத்திலுள்ள விலைப் பட்டியலைப் பாருங்கள்.)
4. சில முக்கிய விவரங்கள்:
- இந்த வாய்ப்பை தொடங்க ரூ.700 போதும்.
- புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. (ஏற்கெனவே, வேறு எங்கோ வாங்கிய பொருட்களை எங்களிடம் வாங்குங்கள்.)
- ஒவ்வொரு மாதமும் ஒரு பொருள் இலவசம்.
- வெஸ்டிஜ் நிறுவனத்திற்கு இந்தியா முழுதும் 4000-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
- அவை தவிர, மொபைல் ஆப் மூலமாகவும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம்.
5. இன்னும் சில விவரங்கள்
- எங்கள் வெஸ்டிஜ் நிறுவனம் 12 ஆண்டுகளாக சிறப்பாக வளர்ந்து வருகிறது. (சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். நிலையான நிறுவனங்கள் என்று எத்தனை பார்க்கமுடிகிறது? வாழ்க்கையை மாற்றுகிறோம் என்று கூறி எத்தனை நிறுவனங்கள் மக்களின் உழைப்பையும், பொன்னான நேரத்தையும், பணத்தையும் வீணடித்தன?))
- எங்கள் நிறுவனர் திரு. கௌதம் பாலி அவர்கள் "தி அப்டைனர்" என்ற சர்வதேசக் குழு வழங்கும் "சிறந்த நிறுவனர்" என்ற உயரிய கௌரவத்தை கடந்த 3 ஆண்டுளாக பெற்று வருகிறார்.
- வெஸ்டிஜ் நிறுவனம் அவ்வப்போது புதிய பொருட்களை அறிமுகம் செய்துவருகிறது. (ஏற்கெனவே 200 பொருட்களுக்கும் மேலாக உள்ளன. இன்னும் பல பொருட்கள் வரவுள்ளன. சற்று சிந்தியுங்கள். எல்லோருக்கும் தேவையான பொருட்களை சிறந்த தரத்தில், மிகச் சரியான விலையில் வெஸ்டிஜ் நிறுவனம் வழங்கும் நிலையில், அதன் வளர்ச்சி எப்படி இருக்கும், அதை நாம் எப்படி உபயோகித்துக் கொள்ள முடியும் என்று யோசியுங்கள்.)
- வெஸ்டிஜ் நிறுவனம் ஸ்மார்ட்போன் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூடிய விரைவில் மொபைல் போன்கள், போன் உதிரிபொருட்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப், கார் உதிரிகள் போன்றவை வர உள்ளன.
6. சரி. இப்போது என்ன செய்யவேண்டும்?
எனது வேண்டுகோள். வெஸ்டிஜ் நிறுவனத்துடன் உங்களை மனதளவில் ஒரு வருடத்திற்கு பிணைத்துக் கொள்ளுங்கள். (அதாவது, குறைந்தது ஒரு வருடத்திற்காவது வெஸ்டிஜ் நிறுவனத்திலிருந்து பொருட்கள் வாங்குவது என்று முடிவு செய்துகொள்ளுங்கள். முடிந்தால் பிறரிடமும் சொல்லுங்கள்.) இதையே இவ்வளவு காலமாய் வேறெங்கோ செய்துகொண்டுதானே இருந்தீர்கள். ஒரே ஒரு பைசாவாவது சம்பாதிக்க முடிந்ததா? ( நீங்கள் மட்டுமில்லை, உங்கள் முந்தைய தலைமுறையும் அதையே தானே செய்தது? வாழ்க்கையில் ஏற்றம் வந்ததா?) இங்கு, உங்களை வெறும் 12 மாதங்களுக்கு மட்டுமே முயற்சி செய்யச் சொல்கிறேன்.
அந்த ஒரு வருட காலத்தில், உங்கள் கீழ் உறுப்பினர்களை இணைப்பது தான் என் திட்டம். (இது உத்தரவாதம் இல்லை. ஆனால், நான் என் சொந்த முயற்சியில் இதற்கென ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். இந்த மென்பொருள் மூலம், புதிதாக இணையும் நபர்களை ஆறு, ஆறாக அனைவரின் கீழும் இணைக்க உள்ளேன். இதற்கு சுமார் ஒரு வருட காலம் போதும் என்று நம்புகிறேன். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன்.)
0 comments :
Post a Comment